பெருமாள், சிவன் கோயில்களில் மார்கழி உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2020 11:12
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள சைவ, வைணவ தலங்களான சிவன், பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மார்கழி மகா உற்ஸவம் துவங்கியது.
சுந்தரராஜப் பெருமாள், வரதராஜப் பெருமாள், அனுமார் கோயில் என ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை கோஷ்டியினர் பாடினர். இதே போல் சிவ ஸ்தலங்களில் மாணிக்கவாசகர் அருளிய திரும்வெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன.அனைத்து கோயில்களிலும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருபள்ளிஎழுச்சி தொடங்கி, பாடல்கள் பாடப்பட்ட பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்ஸவத்தில் இரண்டாம் நாளாக பெருமாள் ஏகாதசிமண்டபத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து 12 ஆழ்வார்களுக்கும் தீர்த்தம், சடாரி சாதிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. டிச., 25 ல் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அருள்பாலிக்கிறார்.மார்கழி உற்ஸவத்தையொட்டி பக்தர்கள் அதிகாலை சாரல் மழை, பனி மூட்டத்திற்கு மத்தியில் சுவாமி தரிசனம் செய்தனர்.