பதிவு செய்த நாள்
17
டிச
2020
11:12
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், பத்ரகாளியம்மன், அபிராமி அம்மன், வெள்ளை விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், நாகல்நகர் புவனேஸ்வரி, மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், கிழக்கு ரதவீதி லிங்கேஸ்வரர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில்மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இதே போல், போடிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
பழநியில் யாகபூஜை: மலைக்கோயிலில் மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்த விநாயகருக்கு கணபதிஹோமத்துடன், யாகபூஜை நடந்தது.விநாயகருக்கு புனித கலசநீரில் அபிஷேகம் செய்யப்பட்டது. பழங்கள் படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம் செய்தனர். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சிக்காக அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை 5:00 மணிமுதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.