பதிவு செய்த நாள்
17
டிச
2020
05:12
ஈரோடு: காளியம்மன் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜை நேற்று துவங்கியது. மார்கழி முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. வரும், 25ல் வைகுண்ட ஏகாதசி விழா, 30ல் ஆருத்ரா தரிசனம், ஜன., 1ல் ஆங்கில புத்தாண்டு, 2ல் சங்கடஹர சதுர்த்தி, 12ல் அனுமந் ஜெயந்தி, 13ல் போகி பண்டிகை, 14ல் தைப்பொங்கல் நடக்கிறது.
* கோபி, சாரதா மாரியம்மன் கோவிலில், கட்டளைதாரர் மூலம், அபி ?ஷகம், பூஜைகள் நடந்தன. இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், சமூக விலகலுடன், முக கவசம் அணிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, ஐயப்பன் கோவில், அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள் ஊத்துக்குளி அம்மன், சவுடேஸ்வரி அம்மன், சுப்ரமணியர் கோவில்களில், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்தி விநாயகர்-ஐயப்பன் கோவிலில், குருசாமி முன்னிலையில், சபரிமலைக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் துவக்கினர். அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவையை தொடர்ந்து ஆண்டாள் பாடலுடன் பஞ்சபுராணம் பாடப்பட்டது. 5:00 மணிக்கு திருமுறை வழிபாடு, குருமார்கள் வணக்கம் நடந்தது. பின், நந்தியம் பெருமானுக்கு வணக்கப்பாடல் பாடப்பட்டது.