பதிவு செய்த நாள்
17
டிச
2020
05:12
ஈரோடு: ஈரோடு, மோளகவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் விழா வரும், 29ல் துவங்குகிறது. ஈரோடு, மோளகவுண்டன்பாளையத்தில் மாரியம்மன், காளியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இங்கு வரும், 29 இரவு பூச்சாட்டுதலுடன் ஆண்டு திருவிழா துவங்குகிறது. 31 இரவு கம்பம் நடுதல், ஜன., 5 மாலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 6ல் காலை பொங்கல் வைத்தல், மாலையில் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 7 ல், கம்பம் எடுத்தல், மாலையில் மறு பூஜை நடக்கிறது.