பதிவு செய்த நாள்
17
டிச
2020
05:12
அவிநாசி : குழந்தைகளிடம், ராமாயணத்தை புகுத்த வேண்டும் என, ஆன் மிக சொற்பொழிவாளர்திருச்சி கல்யாணராமன் பேசினார். அவிநாசி, ஸ்ரீ வியாசராஜர் ராமநாம பஜனை மடம் சார்பில், மார்கழி மாத, கம்பராமயண தொடர் சொற்பொழிவு நேற்று துவங்கியது.இதில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:ஏழை, பணக்காரன் என, எந்தவொரு பாகுபாடுமின்றி, உலகம் முழுக்க கொரோனா நோய் பாதிப்பை ஏற்படுத்தியது. பகவான் தண்டிக்க மாட்டான்; மாறாக, கண்டிக்கவே செய்வான். ஆனால், மக்கள் தீமையை தொடர்ந்து செய்தததன் விளைவாக, கொரோனா வடிவில் தண்டித்து விட்டான். நல்லது செய்யும் போது, கஷ்டம் வரத்தான் செய்யும். இருந்தாலும், நன்மையை மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். துன்பம், கஷ்டத்தை போக்கும் ஆற்றல், பகவானுக்கு உண்டு.சங்க நுால்களில் முதன்மையானது ராமாயணம். இதனை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்; அவர்களிடம் புகுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.