பதிவு செய்த நாள்
17
டிச
2020
05:12
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், மூலவருக்கு பொருத்தப்படும், 9 கிலோ எடை கொண்ட வெள்ளி பிரபையை, சென்னை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள், வெள்ளி, தங்கம் போன்ற பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.அந்த வகையில், சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், மூலவருக்கு பின்னால் பொருத்தப்படும் பிரபையை வெள்ளியால் தயார் செய்து கொடுப்பதாக, கோவில் நிர்வாகத்திடம் உறுதி கூறினர்.இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் அனுமதி பெற்றவுடன், சென்னை பக்தர், 9 கிலோ எடை கொண்ட வெள்ளியால் தயார் செய்யப்பட்ட வெள்ளி பிரபையை, நேற்று முன்தினம் காணிக்கையாக, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிக்குமார் ஆகியோரிடம் வழங்கினார்.இதன் மதிப்பு, 6.5 லட்சம் ரூபாயாகும். அதை தொடர்ந்து, புதிய வெள்ளி பிரபை, நேற்று முதல், மூலவருக்கு பொருத்தப்பட்டு வருகிறது.