காரமடை : வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் ஐந்தாம் நாளில் சிறப்பு அலங்காரத்தில் அரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.