ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சேதமடைந்த கதவை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் திருக்கோயில் கிழக்கு நுழைவு வாசல் பிரதான கதவின் இடது பக்கத்தின் கீழே இரும்பு சட்டம் முறிந்து சேதமடைந்தது. நவ.,15 முதல் கதவை திறந்து மூட முடியவில்லை. கதவு கீழே விழாதபடி கயிறு கட்டி கோயில் ஊழியர்கள் பாதுகாப்பில் இருந்தனர்.கதவை சரிசெய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. புதிய இரும்பு சட்டம் பொருத்த அளவீடு செய்யப்பட்டது. கதவை கழற்றி கீழே வைத்தனர். கதவு சேதமடைந்து 37 நாட்கள் ஆகியும் சரி செய்வதில் தாமதம் நீடிக்கிறது. இதனால் திருடர்கள், கால்நடை, விலங்குகள் நுழையாமல் தடுக்க இரும்பு தடுப்பு வைத்து இரவில் ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.