பழநி : பழநி கோயிலின் உபகோயில்களான பழநி நகரம், பாலசமுத்திரம் பெருமாள் கோயில்களில் நாளை (டிச.,25) வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
நகரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். அதன் பின் சுவாமி புறப்பாடு நடைபெறும். காலை 5:00 மணிமுதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.பாலசமுத்திரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாட்டிற்கு பின் காலை 7:00 மணிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், கோயில் ஆகமவிதிகளின் படியும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என செயல்அலுவலர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.