பதிவு செய்த நாள்
24
டிச
2020
09:12
தேனி : சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம், புனித கங்கை நீர் மக்கள் வீடு தேடிவர மாவட்டத்தில் 47 தபால் நிலையங்களில் முன்பதிவு துவங்கியுள்ளது, என, தேனி தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சபரிமலை தேவஸ்தானம், இந்திய அஞ்சல் துறை இணைந்து சபரிமலை சென்று சுவாமியை நேரில் தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே பிரசாதம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாதம் அடங்கிய பாக்கெட்டில் அரவணைப்பாயாசம், நெய் மஞ்சள், குங்குமம், விபூதி, அர்ச்சனை பிரசாதம் வழங்கப்படும். இதற்கு பக்தர்கள் ரூ.450 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படும் முகவரிக்கு 47 தலைமை, துணை தபால் நிலையங்கள் மூலம் 5 தினங்களில் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும். இதுபோல் புனித கங்கை நீர் 250 மி.லி., ரூ.30க்கு பதிவு செய்யும் முகவரிக்கு போடி, பெரியகுளம் உள்ளிட்ட தலைமை தபால் நிலையங்கள், சின்னமனுார், தேனி, உத்தமபாளையம், கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட துணை தபால் நிலையங்களில் இருந்து மட்டுமே அனுப்பப்படும். முன்பதிவு விபரங்களை அறிய அருகில் உள்ள தபால் நிலையங்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம், என்றார்.