ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2020 09:12
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு நாளை (டிச.25) அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இக்கோயில் 108 வைணவ தலங்களில் பழமையானது. ஆண்டு தோறும் மார்கழி மாத திருவிழாக்கள் சிறப்பாக நடப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்க ஆண்டாள் , ரெங்கமன்னார் எழுந்தருளும் நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதை கண்டு த ரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடுவர். தற்போது கொரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்யும்படி கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. நாளை இரவு 7:00 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.