பெத்லகேமில் 2020 ஆண்டு களுக்கு முன்பு கன்னி மரியாளுக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவருக்கு இயேசு கிறிஸ்து என்று பெயர். இயேசு என்றால் விடுதலை யாக்குபவர் என்றும், கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி என்றும் பொருள். ஆம்...அவர் மக்களை பாவங்களில் இருந்து விடுவிக்க சிலுவையில் ரத்தம் சிந்தினார். அவரது பிறந்த நாளையே கிறிஸ்துமஸ் எனக் கொண்டாடுகின்றனர். அவர் பிறந்த இடமான பெத்லகேம் சென்றால் மனதில் அமைதியும், இயற்கையில் மனம் ஈடுபடுவதையும் உணர முடியும். இரவு நேரக் குளிரில் ஆட்டு மந்தையுடன் தங்கியிருந்த மேய்ப்பர்களுக்குத் தான், இயேசு பிறந்த நற்செய்தி துாதர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் மேய்ப்பர்கள் இழிவானவர்களாக கருதப் பட்டனர். அவர்களுக்கு குடிமதிப்பு, குடியுரிமை இல்லை. ஆகவே மற்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போய் குடிமதிப்பு பதிவு செய்யச் சென்ற போது இவர்கள் செல்ல தேவைப்படவில்லை. மேய்ப்பர்களின் சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாத சூழல் அப்போது நிலவியது. இந்நிலையில் மேய்ப்பர்களுக்கு ஆண்டவர் முதலிடம் கொடுக்கின்றார். அவர் குழந்தையாக பிறந்த இந்த நாளில் நல்வாழ்த்து நாம் பெறுவோம்.