பதிவு செய்த நாள்
26
டிச
2020
11:12
புதுச்சேரி: சனி பெயர்ச்சியையொட்டி புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் 12 அடி உயர சனிபகவானுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை நடைபெறும், சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, 80 அடி உயர மகர கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில், 27 அடி உயர சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனி பெயர்ச்சி விழா, நாளை 27ம் தேதி நடக்கிறது. அன்று காலை 5:22 மணிக்கு, சனீஸ்வரர், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, இன்று 26ம் தேதி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, 1000 லிட்டர் நல்லெண்ணையால் சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நாளை 27 ம் தேதி, காலை 5:22 மணிக்கு, சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள 80 அடி உயர மகர கும்பத்தில், உலக நன்மை வேண்டி, 8000 லிட்டர் நல்லெண்ணை ஊற்றி, மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதைத் தொடர்ந்து, 44 நாட்களுக்கு, தினசரி 12 அடி உயர சனீஸ்வரருக்கு நல்லெண்ணை அபிேஷகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.