ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் சந்தனம் கலைந்த அலங்காரத்தில் மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற சிவஸ்தலமான உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரிதாயார் கோயிலில் உள்ள பச்சைமரகத நடராஜர் சன்னதி உலகப்பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையப்பட்டு, மூலவருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். அதன்படி இன்று கலைந்த அலங்காரத்தில் மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நிறைவேற்றப்படும்.நாளை ( டிச.,30 ) அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.