உடுமலை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சிதம்பரேஸ்வரர் சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மார்கழி மாதத்தையொட்டி, சிவாலயங்களிலும் சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடக்கிறது. இன்று, ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைப்பதையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று அதிகாலையில், சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், சுவாமிகள், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டு, வழிபட்டனர். இன்று,அதிகாலையில் சுவாமி ஆருத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெற்றது. சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.