காரைக்கால் : காரைக்கால், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் 15ம் ஆண்டு மார்கழி மாத உற்சவம் நடைபெற்று வருகிறது.விழாவில், உலக நன்மை வேண்டி நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது.வேண்டுதல் கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக சென்று எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.