ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜருக்கு சந்தன காப்பு களைதல், புதிய சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான மரகத நடராஜரை புதிய சந்தன காப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக ரூ.250, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வருகை குறைவால் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டு அனைவரும் ரூ.10 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டனர்.காரைக்குடி பெண் பக்தர் சந்திரா கூறுகையில், கூட்டம் இல்லாத நிலையிலும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்காமல் கட்டணம் வசூலிப்பது தவறு. ஏழை பக்தர்கள் சிரமப்பட்டனர், என்றார்.தேவஸ்தான சமஸ்தான திவான் பழனிவேல் ராஜன் கூறுகையில், இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டது. ரத்து செய்யப்படவில்லை. அதுகுறித்து விசாரிக்கிறேன்,என்றார்.