காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இதனால் பகவானை தரிசனம் மேற்கொள்ள பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சனிஸ்வர பகவான் கோவிலில் கடந்த 27ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. பகவானை தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு மேற்கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் பதிவு மூலம் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
சனிப்பெயர்ச்சி முடிந்து 48 நாட்கள் பகவானை தரிசனம் மேற்கொள்ள கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று சனிப்பெயர்ச்சி முடிந்து முதல் சனியை முன்னிட்டு அதிகாலை 4.30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் சார்பில் சனிடைசர் மற்றும் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பகவானை தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் முககவசம் அணிந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.