கோவை:கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள சாய்பாபா கோவிலில் (நாகசாயி மந்திரில்), 78வது ஆண்டு தரிசன தின விழா நடந்தது.சாய்பாபாவிற்கு தங்கத்தாலான சேஷவாகன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாகசாயி மற்றும் விநாயகர் உற்சவராக எழுந்தருளுவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காலை 5:15க்கு காகடஹாரத்தியுடன் நிகழ்ச்சி துவங்கியது, மகாகணபதிஹோமம், பூர்ணாஹுதியும், காலை 11:10 மணிக்கு நாகசாயி பஜன், தொடர்ந்து மகாஅபிஷேகமும், பகல் 1:00 மணிக்கு பிரசாத வினியோகமும் நடந்தது.மாலை 6:45 மணிக்கு நாகசாயி பஜன், இரவு 8:30 மணிக்கு சேஷஹாரத்தியோடு நிறைவடைந்தது. பக்தர்கள் சிறப்பு சேவா தரிசனத்துக்கு, சமூக இடைவெளிவிட்டு அனுமதிக்கப்பட்டனர்.இந்நிகழ்வு சமூகவளைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும், பாபாவை தரிசித்து சென்றனர்.