அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2021 12:01
ரிஷிவந்தியம்; ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 8 உண்டியல்கள் உள்ளன. உண்டியல் பணத்தை எண்ணும் பணி 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் உண்டியல் பணம் எண்ணாமல் இருந்த நிலையில் நேற்று எண்ணப்பட்டது. இதில், ௧௭ லட்சத்து, ௩௮ ஆயிரத்து ௩௨௦ ரூபாய் இருந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில், சரக ஆய்வாளர் சுரேஷ், செயல் அலுவலர் அருள் ஆகியோர் மேற்பார்வையில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணத்தை எண்ணினர்.கோவில் எழுத்தர் லோகநாதன் பணியாளர்கள் பிரகாஷ், விமல் ஆகியோர் உடனிருந்தனர். மணலூர்பேட்டை எஸ்.ஐ., செல்வகுமார் காவலர் சங்கர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.