கோவை:உலக நன்மைக்காகவும், சகல ஜீவராசிகளின் செழிப்பான வாழ்வுக்காகவும், வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று காலை 11:00 மணிக்கு மகாசுதர்சன ஹோமம் நடந்தது.இதற்காக கோவில் முன் மண்டபத்தில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. அதைச்சுற்றி நான்கு திக்குகளில் வேதவிற்பன்னர்கள் அக்னியை மூட்டி, ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று துவங்கும், சுதர்சன மந்திரத்தை ஆயிரத்து எட்டுமுறை பாராயணம் செய்தனர்.பகல் 12:30 மணிக்கு, ஹோமம் பூர்ணாஹுதியோடு நிறைவடைந்தது. வேணுகோபால கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.