மயிலம் - மயிலம் பொம்மபுர ஆதீன திருமடம் வளாகத்தில் திருப்பாவை விழா நடந்தது.விழாவுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி, திருப்பாவை, திருவெம்பாவை நூல்கள் குறித்து சிறப்புரையாற்றினார். ராஜராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி செயலாளர் சிவக்குமார், சிவப்பிரகாசர் பள்ளி செயலாளர் விஸ்வநாதன், தமிழ்க் கல்லுாரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லுாரி இணை பேராசிரியர் சிவக்குமார் திருவம்பாவை குறித்தும், புதுச்சேரி தெய்வ சேக்கிழார் மன்ற செயலாளர் சீனு வேணுகோபால் திருப்பாவை குறித்தும் பேசினர்.காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி உட்பட பலர் பேசினர்.உதவி பேராசிரியர்கள் சிவசுப்பரமணியன், குமார், வள்ளி, சதீஷ், முன்னாள் சேர்மன் மலர்மன்னன், இளைஞரணி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.