பதிவு செய்த நாள்
08
ஜன
2021
03:01
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை ரயில்வே ஸ்டஷேன் அருகிலுள்ள கர்ணல் முனீஸ்வரன் கோவிலின், 52வது ஆண்டு முப்பூஜை திருவிழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில், மகா கணபதி ஹோமம், பாலசண்டி ஹோமம், லட்சுமி துர்கா, நவகிரக ஹோமங்கள் நடந்தன. இரண்டவாது நாளான நேற்று, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது ஏராளமான ஆடுகள், கோழி பலியிட்டு, முப்பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், கோவில் பூசாரி சுந்தரேச பிள்ளைசாமி அருள் வந்து ஆடு, மற்றும் கோழியை கடித்து ரத்தம் குடித்தார். இதில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.