9 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம் கோயில் மேற்கு வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2021 06:01
ராமேஸ்வரம் : 9 மாதத்திற்கு பின் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மேற்கு நுழைவு வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஊரடங்கினால் 2020 மார்ச் 24 முதல் ராமேஸ்வரம் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து முக்கிய கோயில்கள் மூடப்பட்டு, சில தளர்வுகளுடன் செப்.,1 முதல் கோயில்கள் திறக்கப்பட்டது.ராமேஸ்வரம் கோயிலில் கிழக்கு நுழைவு வாசல் மட்டும் திறந்து, முகக்கவசம் அணிந்த பக்தர்களை சமூக விலகலுடன்கோயி லுக்குள் தரிசிக்க அனு மதித்தனர். மற்ற 3 வாசல்களும் திறக்காமல் மூடியே கிடந்தது. கோயில் மேற்கு வாசல் அருகில் உள்ள கடைகள் திறக்காமல் வணிகர்களுக்கு வருவாய் இன்றியும், இவ்வாசல் வழியாக பக்தர்கள் செல்ல முடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில் 9 மாதத்திற்கு பின் நேற்று கோயிலில் மேற்கு நுழைவு வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோயிலுக்குள் மூடி கிடந்த கடைகளை திறந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.