திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான இன்று காலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 8:00 மணிக்கு புஷ்பவல்லி தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கண்ணாடி அறையில் எழுந்தருளினார். திருவாய்மொழி பாசுரங்கள் சேவை சாற்றுமுறை நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். 12 நாட்கள் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீசீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.