பதிவு செய்த நாள்
10
ஜன
2021
10:01
தஞ்சாவூர்: ஆங்கில புத்தாண்டு பிறந்த முதல் பிரதோஷமான இன்று, தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற அபிஷகேத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷ வழிபாடு சிறப்பு பெற்றவை. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு பிறந்த முதல் பிரதோஷமான இன்று மாலை நந்திபெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்கள் மற்றும் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நந்தி மண்டபத்தை சுற்றிலும் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அமர வைக்கப்பட்டனர். மேலும் ஆங்காங்கே ஏராளமானோர் நின்றபடியும் அபிஷேகத்தை கண்டு களித்தனர். பின்னர் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாலும், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து பக்தர்களும், பள்ளி விடுமுறை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தன.