கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டியை சேர்ந்த பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர் காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து சென்று பூஜை நடத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த மத்திப்பட்டியை சேர்ந்த பழநி பாதயாத்திரை பக்தர்கள், 25 வருடங்களாக பழநி செல்கின்றனர். இந்தாண்டு செல்லும் குழுவினர் நேற்று காலை, 10:00 மணிக்கு லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் காவிரி நீர் தீர்த்தக்குடத்தில் எடுத்து சென்று மத்திப்பட்டி மாரியம்மன் கோவிலில் அபி?ஷகம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும், பஜனை பாடல்கள் பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, பழனிக்கு பாத யாத்திரை செல்கின்றனர்.