Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரகலாதன் அதிதி அதிதி
முதல் பக்கம் » பிரபலங்கள்
அகல்யா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
12:05

அகல்யாவின் மனம் அவள் பிறந்த பாற்கடலையும் விட வேகமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவள் என்ன தான் செய்வாள்? கணவருடன் தானே கூடி இருக்கிறோம் எனக் கருதி, ஒரு வேட்டை நாயிடம் சிக்கி உயிரினும் மேலான கற்பையே இழந்து விட்டாள். அவள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அவளுக்கு வாழவே பிடிக்கவில்லை. சாதாரண பெண்மணியா அவள்! பாற்கடலை கடைந்த போது அமிர்தத்துடன் பிறந்த மாணிக்கம் அவள். பிறந்தவுடனேயே பிரம்மன் ஆச்சரியம் கொண்டார். தன் படைப்பிலேயே இவள் தான் மிகச்சிறந்த பேரழகி என்பதை புரிந்து கொண்டார். தன்னை அறியாமலேயே அவளை அகல்யா என அழைத்தார். அகல்யா என்பதின் பொருள்...அழகில்லாத இடமே இல்லாதவள் என்பது. ஆம்.. அவள் உடலில் ஒவ்வொரு பகுதியும் அழகு. பேரழகு பெட்டகம் ஒன்று உலகில் பிறந்தால் என்னாகும்? நான், நீ என போட்டியிட்டுக் கொண்டு அகல்யாவை திருமணம் செய்து கொள்ள பெரும் போட்டியே நிகழ்ந்தது. இந்திரன், வாயு, அக்கினி, எமன் ஆகியோர் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்கள். எல்லோருமே, பிரம்மனிடம் வந்தனர். அகல்யா எனக்கே சொந்தம் என நான்கு பேரும் வாதிட்டனர். பிரம்மன் சிரித்தார். என் படைப்பிலேயே இவளைப் போல் சிறந்த அழகி யாருமில்லை என்பது உண்மையே! ஆனால் அவளுக்கேற்ற திறமைசாலி கணவனாக அமைய வேண்டாமா? அப்படிப்பட்டவனை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் என்ன திறமை உள்ளது. ஓடிவிடுங்கள் என அவர்களை விரட்டினார். தேவேந்திரன், நான் தேவலோகத் தலைவன் என்பது உமக்கு தெரியாதோ? இதை விட என்ன தகுதி வேண்டும் என்றான்.

அடுத்து வாயு பகவான், நான் தென்றலாய் வீசுபவன், புயலாய் சீறுபவன். உலகிலுள்ள ஜீவராசிகள் சுவாசிக்க என்னைத்தானே நம்பியுள்ளனர். நீர் படைப்பவர். நான் படைத்ததை வாழ வைப்பவன். இதனால் என்னை விட வலிமையுள்ளவர் யார்? என்று எக்காளமாக பேசினான். இதைக்கேட்டு எமன் கலகலவென சிரித்தான். அடேய் வாயு! நீ சுவாசிக்க செய்து விடுவதால் பெரிய மனிதனா? உலக மக்களின் விதியை நிர்ணயிப்பவன் நான். உன்னால் சுவாசம் பெற்றவர்களின் மூச்சை நிறுத்துபவன். என்னை மிஞ்சி இவ்வுலகில் யாரும் வாழ முடியாது. அனைவர் உயிர் என் கையில் என்றான் அலட்சியமாக. அப்போது அக்கினி தேவன் வந்தான். டேய் எமப்பயலே! என்ன உளறுகிறாய். உன்னால் பறிக்கப்படும் உயிர்களை எரிப்பவனே நான் தான். புகைவடிவில் உலக உயிர்களைக் கொண்டு சேர்ப்பவன். ஏன்.. அனைத்து திருமணங்களுக்கும் நான் தான் சாட்சி. அக்னி சாட்சி இல்லாமல் உலகில் நல்லதும் நடக்காது, கெட்டதும் நடக்காது. நீங்கள் வகையாய் சாப்பிட உணவும் கிடைக்காது என கிண்டலாக சிரித்தான். பிரம்மன் அவர்களின் சண்டையை தடுத்து நிறுத்தினார். நீங்கள் உங்கள் வீரப்பிரதாபங்களை பறைசாற்றிக் கொண்டது போதும். உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன். அந்த போட்டியில் வெற்றி பெறுபவனுக்கு அகலிகையை திருமணம் செய்து வைக்கிறேன். போட்டிக்கு தயாரா? என்றார். வீரர்கள் நால்வரும் மார்தட்டி நின்றனர். பிரம்மன் போட்டியை அறிவித்தார். இரண்டு முகம் கொண்ட பசு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதை ஒருமுறை வலம் வரவேண்டும், அவ்வாறு வலம் வருபவனுக்கே என் மகள் அகல்யாவைத் திருமணம் செய்து வைப்பேன் என்று ஒரு போடு போட்டார். அசந்துவிட்டனர் தேவ மகன்கள். இப்படி ஒரு போட்டியை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

பிரம்மனே! உலகில் இல்லாத ஒரு பொருளை நீர் கண்டுபிடிக்க சொல்கிறீர். எங்களை கேலி செய்கிறீரா? என்றான் இந்திரன். பிரம்மன் அசரவில்லை. நான் சொன்னதை செய்தால் அகல்யா உங்களுக்கு கிடைப்பாள். இரட்டை முக பசுவை யார் கண்டுபிடித்து வலம் வந்தாலும் அவர்களுக்கே என் மகள், புறப்படுங்கள் எனக்கூறி அவர்களை அனுப்பி விட்டார். இந்திரன் தன் ஐராவத யானையின் மீதும், அக்கினி ஆட்டுக்கடா மீதும், எமன் எருமை வாகனத்திலும், வாயு தன் மான் வாகனத்திலும் சென்று எல்லா உலகங்களிலும் இரட்டைமுகப் பசுவைத் தேடினர். உலகில் எந்த மூலையிலும் அப்படி ஒரு ஜீவன் இல்லை. இந்த நேரத்தில் நாரதர் கவுதம முனிரைச் சந்தித்தார். முனிவரே! இப்போது தேவலோகத்தில் ஒருபெரும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பாற்கடல் கன்னி அகலிகையை திருமணம் செய்ய தேவர்களுக்குள் கடும் போட்டி. அவர்களை விட நீங்கள் உயர்வானவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்த போட்டியில் பங்கு கொண்டு, நீங்கள் வெற்றி பெற வேண்டும். அந்த தேவர்கள் திரும்புவதற்குள் அகலிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். கவுதமர் யோசித்தார். நான் இதில் வெற்றி பெற்றால் அவர்களை விட உயர்ந்து விடுவேன். ஆனால் இரட்டை முக பசுவுக்கு எங்கே போவது? என்றார். நாரதர் சிரித்தவாறே, முனிவரே! இரட்டை முக பசு என்ற ஒன்று உலகில் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதை அறியாத அந்த மூடர்கள் உலகம் முழுவதும் அதைத் தேடி அலைகிறார்கள். ஆனால் உங்கள் வீட்டில் தான் அந்தப் பசு இப்போது நின்று கொண்டிருக்கிறது என்றார். கவுதமர் ஆச்சரியப்பட்டார். நாரதரே! என்ன உளறுகிறீர். ஏதாவது கலகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறீரா? என சற்றே கோபத்துடன் கேட்டார்.

நாராயணா! நான் ஏன் உங்களிடம் விளையாட்டு காட்டுகிறேன். உங்கள் வீட்டு காராம்பசு இப்போது சினையாக இருக்கிறது. என் சக்தியால் நான் இப்போதே அதற்கு கன்றை ஈணச் செய்கிறேன். கன்று பின்பக்கமாக வெளியே வரும்போது அதன் முகம் வெளியே தெரிந்த உடனேயே அதை ஒருமுறை வலம் வந்து பிரம்மனிடம் காட்டி விடுவோம். பிரம்மன் தன் மகளைத் தந்துவிடுவார் என்றார். நாரதரின் புத்திக்கூர்மையை கவுதமர் பாராட்டினார். அவர்களின் திட்டப்படியே எல்லாம் நடந்தது. அகல்யா-கவுதமர் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். இதை அறியாத நான்கு தேவர்களும் இரட்டை முக பசு கிடைக்காத விரக்தியில் தேவலோகம் திரும்பினர். அகல்யாவுக்கு திருமணம் நடந்து குழந்தையும் பிறந்து விட்டதை கேள்விப்பட்டு வருந்தினர். ஒரு இலகுவான வழி இருந்தும் இரட்டை முக பசுவைத் தேடி அலைந்த தங்கள் முட்டாள்தனத்தை நொந்தனர். இந்திரனுக்கு தன் தோல்வியை தாங்க இயலவில்லை. இந்திரனும் கவுதமரை பழிவாங்க எண்ணினான். தனக்கு கிடைக்காத அகல்யாவின் வாழ்க்கையை எப்படியாவது கெடுத்து விடுவது என்பது அவன் திட்டம். கவுதமரின் நடவடிக்கைகளை கவனித்தான். கவுதமர் அதிகாலையில் சேவல் கூவியதும், நீராட ஆற்றுக்குச் செல்வது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், சேவலாய் வடிவெடுத்து, ஒருநாள் நடுநிசியிலேயே கூவ, கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். இந்திரன், தன் வடிவை கவுதமர் போல மாற்றிக் கொண்டு, குடிலுக்குள் வந்து, இன்னும் விடியவில்லை, சேவல் தவறாகக் கூவியிருக்கும் போல என்று சொல்லி, அகலிகையுடன் தனித்திருந்தான். அவள் கற்பிழந்தாள். திரும்பி வந்த கவுதமர் நடந்ததை அறிந்து, அவளைக் கடிந்து கொண்டார். கல்லாகப் போகும்படியும், ராமனின் கால்பட்டால் தான் விமோசனம் என்றும் சொல்லி விட்டார். ராமனும் வந்தார். கால்பட்டது. அகலிகை எழுந்தாள். கற்பிழந்த ஒருத்தியை ஏற்றுக்கொள்ள கவுதமருக்கு தயக்கம். உருவம் ஒன்றாக இருந்தாலும் கணவனுக்கும், இன்னொருவனுக்கும் ஸ்பரிச பேதம் தெரியாத இவளை நான் எப்படி ஏற்பது? என்றார். உடனே ராமன்,கவுதமரே! முக்காலமும் உணர்ந்த ஞானியான நீரே, கூவியது உண்மைச் சேவலா, பொய்ச்சேவலா எனத்தெரியாமல் சந்தியாவந்தனத்துக்கு கிளம்பிச் சென்றீரே! அப்பாவியான, இவள் உமக்கும், அவனுக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி அறிவாள்? என்று எதிர்க்கேள்விகேட்டார். முனிவரால் பதில் சொல்ல முடிய வில்லை. அகலிகையை ஏற்றுக் கொண்டார். அத்துடன் திருமணமாவதற்கு முன் எந்த கற்புத்திறத்துடன் இருந்தாளோ அதே நிலையை அடைந்தாள்.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar