பதிவு செய்த நாள்
12
ஜன
2021
07:01
கோபி: மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவுக்கு, திருப்பணி தீவிரமாக நடக்கிறது. கோபி அருகே மொடச்சூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 1999ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்த, 2018 ஜூலையில், பாலாலயம் செய்யப்பட்டது. பாலாலய அறையில் குடிகொண்டுள்ள அம்மனுக்கு, மூன்று கால பூஜை நடக்கிறது. அதே சமயம், 2018 முதல் நடப்பாண்டு வரை, மூன்றாண்டுகளாக குண்டம் விழா நடக்கவில்லை. இந்நிலையில், கோவில் நிதியாக, 31 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவிலின் மேல்தளம் கட்டமைப்பு பணியை துவங்க அனுமதி கிடைத்தது. இதையடுத்து ஒரு வாரமாக, திருப்பணி நடந்து நடக்கிறது. மொத்தம் 4,800 சதுர அடி பரப்பளவு கொண்ட கோவிலில், ஒன்பது தூண்கள் நிறுவ, தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் கட்டமைப்பு பணியை துவக்கியுள்ளது. திருப்பணி முடிந்ததும், நடப்பாண்டில் குண்டம் விழா நடக்கும் என, அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.