Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகாசி விசாக விரதமுறை! வைகாசி விசாக விரதமுறை!
முதல் பக்கம் » வைகாசி விசாகம்
வைகாசியின் விசேஷங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
05:05

தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரப் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் வைகாசி விசாகமும் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் ஞானச் சிறப்புக்கு உரிய சிறப்பான நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தில் தான் தேவர் துன்பம் தீர முருகன் அவதரித்தார்.

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். விசாகம், வைகாசி, அனிலநாள், சோதிநாள் எனவும்படும். இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. ஞான நட்சத்திரமான விசாகத்தில் முருகப்பெருமான் அவதரித்தார். சூரபதுமன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணையங்கடலாகிய சிவபிரான் அசுரர்களுடைய கொடுமைகளினின்று அவர்களைக் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணின்றும் ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவ்வாறு பொறிகளும் வாயு, அக்கினி, தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தது. சரவணப் பூந்தடாகத்திலே ஆறு பொறிகளும் ஆறு திருக்குழந்தைகளாகி விளங்கின. விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகட்குப் பாலூட்டுவித்தார். ஆறு பொறிகளும் திருக்குழந்தைகளான தினம் வைகாசிமாதத்து விசாகநாள் ஆகும். அதனால் விசாகன், விசாகப் பெருமான் என்றெல்லாம் அவரைப் போற்றி வழிபடுவார்கள். வைகாசி பவுர்ணமியுடன் விசாக நட்சத்திரம் சேர்ந்து வரும் என்பதால், அந்த மாதத்துக்கு வைகாசம் அல்லது வைகாசி என்ற பெயர் வந்தது. வைகாசி பவுர்ணமியை, மதி நாண் முற்றிய மங்கலத்திருநாள் என்று போற்றுகிறது மணிமேகலை. இந்தத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு!

ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப் படுகின்றது. எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தந்திருவிளையாடலாற் குழந்தையான நாளாதலின் சைவமக்கள் வழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும், இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான் என்பார்கள். இந்நாளில் எமனுக்குத் தனி பூஜை உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை.

நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான்.

பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான். திருக்கோட்டி நம்பி என்ற வைணவப் பெரியார் அவதரித்ததும் இந்த மாதத்தில்தான். பிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி.  திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் வைகாசி விசாகத்தில்தான்.

வைகாசி விசாகம் முருகனுக்கு மட்டுமின்றி சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாககுண்டம் அமைத்து வழிபட வேண்டும். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமியின் அருள் கிட்டும். பவுர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் பாவங்கள் அகலும், புண்ணியங்கள் பெருகும்.

அம்மன் கோயில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரவுபதி அம்மன், காளியம்மன் கோயில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி திருவாதிரை நட்சத்திரம் முதல் விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வசந்தோற்சவம் நடைபெறும்.

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாகத்தில்தான் நடக்கிறது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொள்வது விசேஷம். நாமக்கல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பதினான்கு நாட்கள் நடைபெறும். முதல் மூன்று நாட்களுக்கு மலைமீது விழா நடக்கும். நான்காம் நாள் முதல் அர்த்த நாரீஸ்வரர் நகருக்கு இறங்கிவர, மலையடிவாரத்தில் விழா நடைபெறும். 9-ஆம் நாள் திருவிழா வைகாசி விசாகத்தன்று நடைபெறும். அன்று இறைவன் தேரில் எழுந்தருளி நகர்வலம் வருவார். பதினான்காம் நாள் திருவிழாவின் போது இறைவன் மலைக் கோயிலுக்குத் திரும்பிச் செல்வார்.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் வைகாசிப் பெரும்விழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளன்று கட்டுத்தேர் அமைத்து இறைவனை எழுந்தருளச் செய்து திருவீதி வலம்வரச் செய்வார்கள். இவ்விழாவை ஏற்படுத்திய பெருமை சூரவாதித்த சோழனையே சேரும். தஞ்சாவூர் குடந்தை சாரங்கபாணி கோயிலில் பத்து நாட்களுக்கு வைகாசி வசந்த உற்சவம் நடைபெறும். உற்சவத்தின் முதல் ஏழு நாட்களின்போது பெருமாளும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தாயாரும், கடைசி நாளன்று பெருமாளும் தாயாரும் சேர்ந்தும் காட்சி தருவார்கள்.

காஞ்சிபுரம் கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவன்று 15 கருட சேவை வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். 2010-ஆம் ஆண்டு முதல் சோழவரப் பெருமாளும் இந்தக் கருட சேவையில் கலந்துகொள்வதால் தற்போது 16 கருட சேவையாக நடைபெறுகிறது. சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்வேறு திருநாமங்களைக் கொண்ட 16 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருவது இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.

ராமநாதபுரம் உத்தரகோச மங்கை தலத்தில் வைகாசி விசாகத்தன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி இறைவனை அபிஷேகித்து ஆராதித்தால் பல்வேறு தோஷம் விலகும் என்கிறது அக்னி புராணம். அன்று உச்சி வேளையில் தலையில் அறுகம்புல், அரிசி வைத்து அக்னி தீர்த்தத்தில் நீராடி மங்கள நாதரை வணங்கி ஆராதனை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்கிறார்கள்.

திருவானைக் கோயில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும். அன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள். வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும். திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார். ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் நரசிம்ம மூர்த்திக்கு வருடம் முழுவதும் சந்தனக்காப்பு சாற்றப்பட்டிருக்கும். வைகாசி விசாகத்தன்று சந்தனக்காப்பு நீக்கப்பட்டு நரசிம்மர் முழுப்பொலிவுடன் காட்சி தருவார்.பிறகு புதிய சந்தனம் பூசுவார்கள்.

 
மேலும் வைகாசி விசாகம் »
temple news
வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்திலிருந்து ... மேலும்
 
temple news
கந்தன், சிவகுருநாதன், தண்டபாணி, காங்கேயன், சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என பல பெயர்களால் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த முருகன் வெற்றிப்பரிசாக ... மேலும்
 
temple news
படைவீடு என்னும் சொல்லுக்கு, போர் புரிவதற்காக படைத்தளபதி படைகளுடன் தங்கும் இடம் என்று பொருள். முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar