பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
திருப்பூர்:சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம், ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.காங்கயம், சிவன்மலையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதித்த பின்னரே, அனுமதிக்கப்படுவார்கள். காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி உள்ளவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பக்தர்கள் தேங்காய், பூ, பழம் அபிஷேக பால் உட்பட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதியில்லை. பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள், தீர்த்தம், பூ உட்பட பிரசாதங்கள் பாக்கெட்டுகளில் மட்டுமே வழங்கப்படும்.தைப்பூச் திருவிழா நாட்கள் முழுவதும் அனைத்து கட்டளைகளும் மலைமேல் உள்ள உற்சவருக்கு மட்டுமே நடக்கும். 28ம் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள்வார். தேரோட்டம் வழக்கமாக நடப்பது போல், மூன்று நாட்கள் இல்லாமல், ஒரு நாள் மட்டுமே நடக்கும்.முக்கிய, மூன்று நாட்களான, 28, 29 மற்றும் 30 ம் தேதி ஆகிய நாட்களும் அடிவாரத்தில், மலையை சுற்றி காவடிக்குழுவினர் குடில் அமைத்து தங்குவதற்கும் அன்னதானம் வழங்குவதுக்கும் அனுமதியில்லை, என முடிவு செய்யப்பட்டது.