பதிவு செய்த நாள்
19
ஜன
2021
03:01
வால்பாறை: வால்பாறை துாயஇருதய ஆலய தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று முன் தினம் காலை, 9:00 மணிக்கு கூட்டுப்பாடற்பலி நடந்தது. காலை, 11:00 மணிக்கு ஆலயபங்கு தந்தை மரியஜோசப் தலைமையில், பங்கு குருக்கள் ரஞ்சித், பெனிட்டோ ஆகியோர் திருக்கொடி ஏற்றினர்.வரும், 20ம் தேதி காலை, 9:30 மணிக்கு ஆடம்பர கூட்டுப்பாடற்பலியும், உறுதிபூசுதல் அருள்சாதனை கொண்டாட்டமும் நடக்கிறது. வரும், 23ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அலங்கார ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி அம்புநேர்ச்சையும், 12:00 மணிக்கு அன்பின்விருந்தும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தைமற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.