வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை எஸ்டேட். இங்குள்ள ஸ்ரீராஜகணபதி திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு வேதபாராயணம், மூலமந்திரகாயத்திரி, அஸ்திர மந்திர ேஹாமம் நடந்தது.தொடர்ந்து, யானைமுகனுக்கு மூன்றாம் காலயாக பூஜை, தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.விழாவில், நேற்று காலை, 7:00 மணிக்கு காலமெல்லாம் காத்தருளும் விநாயகருக்கு நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு கலச நீரை பக்தர்கள் ஏந்தி கோவிலை வலம் வந்தனர்.காலை,10:30 மணிக்கு விமானகோபுர கலசத்திற்கு மஹாகும்பாபிஷேக விழா நடந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது. விழாவிற்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.