மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ராமு,ஜோதி, செஞ் சி சரக ஆய்வாளர் அன்பழகன்ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடந்தது. அதில், 42 லட்சத்து 15 ஆயிரத்து 902 ரூபாய் பண ம், 180 கிராம் தங்க நகை , 265 கிராம் வௌ்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், செயல் அலுவலர்கள் திருவக்கரை சிவக்குமார், கோலியனுார் சூரியநாராயணன், அறங்காவலர்கள் சரவணன், செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.