சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் இணைக் கமிஷனராக, மாரிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில் இணைக் கமிஷனராக, பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் ஜெயராமன். இவர் சமீபத்தில், அறநிலையத்துறை கல்வி தொண்டு நிறுவனங்களின் இணைக் கமிஷனராக மாற்றப்பட்டார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகப் பணியை இணைக்கமிஷனர் அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், வேலுார் மண்டல இணைக் கமிஷனராக இருந்த மாரிமுத்தை, ஸ்ரீரங்கம் கோவில் இணைக் கமிஷனராக நியமித்து, கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.