பதிவு செய்த நாள்
23
ஜன
2021
09:01
பெரம்பலுார்: கீழடி போல், கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடம் தேர்வுக்கான முதல் கட்ட ஆய்வுப் பணிகளை, தமிழக தொல்லியல் துறையினர் துவங்கினர்.
தொல்லியல் துறை மூலம், 2020 - 21ம் ஆண்டில், தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்ட சோழபுரம் உட்பட, ஏழு இடங்களில், அகழாய்வு பணிகள் துவங்கப்படும் என, தமிழக அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.இதன்படி, அரியலுார், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம், அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் துவங்கின. முதல் கட்டமாக, டிரோன் மூலம், கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.