உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் ஜன.,26ல் திருவாதிரை நட்சத்திரத்தன்று மாலை 6:00 மணிக்கு மேல் அக்னி தீர்த்தக்குளத்தில் மகா தீபாராதனை விழா நடக்க உள்ளது. அக்னிதீர்த்தக்குளத்தில்108 விளக்குகள் வைக்கப்பட்டு,பஞ்சமுக தீப, துாபங்களால் வேதமந்திரங்கள் முழங்கஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை மாத பவுர்ணமி கிரிவலக்குழுவினர், சமுத்திர ஆரத்திக்குழுவினர், தர்ம ரக்ஷண சமிதியினர் செய்து வருகின்றனர்.