எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2021 11:01
வைத்தீஸ்வரன் கோவில்: வைத்தியநாத சுவாமி கோவிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தேவார பாடல் பெற்ற அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் செல்வ முத்துக்குமார சுவாமி மற்றும் சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் இந்த கோவிலில் சுவாமியை வழிபட்டு இங்கு கொடுக்கப்படும் திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினர் தங்கத் தேர் இழுத்து விநாயகர் சுவாமி அம்பாள் செல்வ முத்துக்குமார சுவாமி செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.