ராஜபாளையம் : ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி சித்திவிநாயகர் கோயில் ,சொக்கநாதன்புத்துார் வடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜூக்கள் கல்லுாரி சித்தி விநாயகர் கும்பாபிஷேக விழாவிற்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகர் ராஜாபட்டர் தலைமை வகித்தார்.யாக சாலை பூஜைகள் தொடங்கி கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ,தீபாராதனை நடந்தது. கல்லுாரி தலைவர் திருப்பதி ராஜா, செயலர் விஜயராகவ ராஜா கலந்து கொண்டனர்.
* சொக்கநாதன்புத்துார் தேவேந்திரகுள வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடகாசியம்மன்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக யாக பூஜை, பூர்வாங்க பூஜை, மந்திர ஸ்தாபனம் நான்காம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10:00 மணிக்கு மூலஸ்தான விமானம் வடகாசியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது.