நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் பகுதியில் பூரணி பொற்கலை உடனுறை பிரம்ம நாராயண ஐயனாரப்பன், தேச மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9:05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தனபூஜை, கோ பூஜையுடன் துவங்கியது. மாலை 5 மணிக்கு முதல் கால யாகபூஜை ஆரம்பம், தீபாராதனை நடந்தது.இன்று(2ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் நடக்கிறது. நாளை(3ம் தேதி) காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், காலை 8:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 9:10 மணிக்கு மேல் கங்கையம்மன், தேச மாரியம்மன், ஐயனாரப்பன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பூரணி பொற்கலை உடனுறை ஐயனாரப்பன் சுவாமி திருகல்யாண உற்சவம் நடக்கிறது.