பதிவு செய்த நாள்
05
பிப்
2021
02:02
கடலுார்: கடலுார் அடுத்த சிங்கிரிகுடி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. கடலுார் அடுத்த சிங்கிரிகுடி கிராமத்தில் கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில், கடந்த 1990 மற்றும் 2008ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. காலை 5:00 மணிக்கு யாத்ரா தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 10:20 மணியளவில் மூலவர் விமான கலசம், ராஜகோபுரம், மற்றும் கோவிலில் உள்ள சன்னதிகளின் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள், நட த்தி வைத்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.