அயோத்தியில் ராமர் கோயில்; ராமேஸ்வரம் மக்கள் தாராளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2021 03:02
ராமேஸ்வரம் : அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ராமேஸ்வரத்தில் வணிகர்கள், பொதுமக்கள் பலரும் தாராளமாக நன்கொடை வழங்கினர்.
உ.பி., அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படுகிறது. கோயில் கட்டுமானத்திற்கு அனைத்து தரப்பினரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். அயோத்தி ராமஜென்ம பூமி இயக்க நிர்வாகிகள் நன்கொடை வசூலிக்கிறார்கள். இதற்காக நன்கொடை ரசீது புத்தகம் அச்சிட்டு ஹிந்து அமைப்பினரிடம் வழங்கியுள்ளனர். அதன்படி நேற்று ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணியினரிடம், பஜ்ரங்கதாஸ் பாபா மடம் நிர்வாகி சீதாராம்தாஸ் பாபா நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார். அதன்பின் கோயில் ரதவீதி சுற்றிய வணிகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் நன்கொடை வழங்கினர்.ஹிந்து முன்னணி மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி, பா.ஜ., நிர்வாகிகள் சுந்தரமுருகன், நாகேந்திரன், மலைச்சாமி, ஆறுமுகலிங்கம் பலர் பங்கேற்றனர். யாசகர்கள் ஆர்வம்ராமேஸ்வரம் திருக்கோயில் சன்னதி தெருவில், யாசகர்கர் பலரும் தாமாக முன்வந்து நிதி வழங்கினர். ராமர் கோயிலுக்கு பலதரப்பினரும் நன்கொடை வழங்க ஆர்வமாக உள்ளதால் வீடு வீடாக செல்ல திட்டமிட்டுள்ளோம் என ஹிந்து முன்னணி பொதுசெயலர் ராமமூர்த்தி தெரிவித்தார்.