திண்டிவனம்; திண்டிவனம் அருகே கொடியம் கிராமத்திலுள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கொடியம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில், மயிலம் எம்.எல்.ஏ.,மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், ஒலக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜாராம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கொடியம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.