பாண்டவர்களின் ஒருவரான பீமனின் வயிற்றில் ‘விருகம்’ என்னும் நெருப்பு இருப்பதால் அவனால் பசி பொறுக்க முடியாது. சாப்பாட்டில் அலாதி விருப்பம் கொண்ட அவனுக்கும் விரதமிருக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. வேத வியாசரை சந்தித்த அவன், ஓராண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஏதாவது ஒருநாள் மட்டும் விரதமிருக்க வழிகாட்டும்படி கேட்டான். ஆனிமாத வளர்பிறை ஏகாதசியன்று தண்ணீ்ர் அருந்தாமல் விரதமிருந்தால் எல்லா ஏகாதசியன்றும் விரதமிருந்த பலன் கிடைக்கும் என்றார் அவர். பீமனும் அதன்படி விரதமிருந்து மகாவிஷ்ணுவின் அருள் பெற்றான். இதனால் இதற்கு பீமஏகாதசி என பெயர் ஏற்பட்டது.