எருக்கு இலை மட்டுமின்றி அருகம்புல், அகத்திக்கீரை, கரிசலாங்கண்ணி, மருது, வில்வம், ஊமத்தை, மாதுளை, இலந்தை, மருக்கொழுந்து, வன்னி, அரசு, கண்டங்கத்திரி, தாழை, அரளி, நெல்லி இலைகளைக் கொண்டும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். தாமரை, மல்லிகை போன்ற வாசனை பூக்கள் மட்டுமின்றி எளிய இலை, தழைகளையும் ஏற்று மகிழ்பவர் விநாயகர் என்பதை இது காட்டுகிறது.