விநாயருக்கு சங்கடஹர சதுர்த்தி விரதமிருக்கப் போறீங்களா... ஓராண்டு இருக்க வேண்டிய விரதம் இது. * மாசி மாத தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் தொடங்க வேண்டும். பிறகு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதமிருந்து அடுத்த மாசியில் வரும் தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் முடிக்க வேண்டும். * விரத நாளில் காலையில் நீராடி விநாயகர் அகவல், காரியசித்தி மாலை பாடல்களை படித்த பின்னர் அன்றாடப் பணிகளில் ஈடுபடலாம். காலையில் மட்டும் சாப்பிடக் கூாடது. இரவில் விநாயகர் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். கடன் தொல்லை, நீண்ட கால நோய், மனக்கவலை தீரவும், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பேறு கிடைக்கவும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.