செம்மங்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2021 10:02
மயிலாடுதுறை: செம்மங்குடி மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சீர்காழி தாலுக்கா செம்மங்குடி கிராமத்தில் தர்மராஜா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அருள்மிகு தர்மராஜ மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இந்த அம்பாளை மனமுருக பிரார்த்தித்து வழிபட்டால் வேண்டிய அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது அருள்வாக்கு இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் தீமிதி உற்சவம் தை மாதம் பிப்ரவரி 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து தினந்தோறும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காலை ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அழகு காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர் தொடர்ந்து மாலை அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.