பதிவு செய்த நாள்
06
பிப்
2021
10:02
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், லிப்ட் அமைக்கும் பணிக்கு, டெண்டர் திறக்கப்பட்டது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்திலிருந்து படிக்கட்டு மற்றும் சாலை வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர். மருதமலையில், ரோப்கார் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, அங்கு ஆய்வு செய்த குழுவினர், மருதமலையில் ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து, மருதமலையில் லிப்ட் அமைக்க, திட்டமிடப்பட்டது. லிப்ட் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்த, வல்லுநர் குழு ஒப்புதல் அளித்தது. லிப்ட் அமைப்பதற்காக, 10 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, மாதிரி திட்ட வடிவம் கொண்டு வரப்பட்டது. மாதிரி திட்டத்திற்கு, அறநிலையத்துறை கமிஷனரும் ஒப்புதல் வழங்கினார். இதனை தொடர்ந்து, லிப்ட் அமைக்கும் பணிக்கு, கடந்த, 3ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. தற்போது, டெண்டர் திறக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. டெண்டர்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு டெண்டர் வழங்கப்படும். விரைவில், பணிகள் துவங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.