நாயக்கனூரில் பிரம்மோற்சவ விழா: யாழி வாகனத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2021 10:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி, யாழி வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் கடந்த, 1ம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நேற்று காலை யாழி வாகனத்தில், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, நாச்சியார் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு சந்திரபிரபை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை யானை வாகனம், தொட்டி திருமஞ்சனம், மாலை, 3:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் அதைத்தொடர்ந்து குதிரை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.