சோழவந்தான்: சோழவந்தான் அருகே தேனுாரில் அழகர்கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் விழா நடந்தது.இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை ஆண்டுதோறும் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு நன்றி கடனாக படைத்து வருகின்றனர். விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி நெற்கதிரை அறுத்து கதிரடித்து திரித்த வைக்கோல் கயிற்றில் நெல்லை கோட்டை கட்டி வழிபாடு செய்தனர். சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் நெல்லை விவசாயிகள் அழகர்கோவில் கொண்டு சென்று கோயிலில் ஒப்படைத்தனர்.